Friday, August 24, 2012

USB Headphone Settings

Windows XP
1. Go to the START menu, choose CONTROL PANEL, choose SOUND AND AUDIO DEVICES.
2. Choose the AUDIO tab, select the headset as the SOUND PLAYBACK and SOUND RECORDING
device.
3. Choose the VOTE tab, select the headset as the VOICE PLAYBACK and VOICE RECORDING DEVICE.
4. Choose the VOLUME tab,adjust VOLUME SLIDER as necessary.The MUTE option should not be selected.

Windows Vista / 7
1. Go to START menu, choose CONTROL PANEL, choose CLASSIC VIEW, choose SOUNDS.
2. Choose the PLAYBACK tab, select the headset as the SOUND PLAYBACK device. Choose PROPERTIES, choose the LEVELS tab, adjust the VOLUME SLIDER to desired level, verify the SPEAKER ICON in not muted.
3. Choose the RECORDING tab, select the headset as the SOUND RECORDING device. Choose PROPERTIES, choose the LEVELS tab, adjust the VOLUME SLIDER to desired level, verify the SPEAKER ICON is not muted.

Mac OS X
1. Go to SYSTEM REFERENCES, choose SOUND.
2. Choose the OUTPUT tab, select the headset as the SOUND OUTPUT device, adjust the OUTPUT VOLUME SLIDER to desired level, verify the MUTE box is unchecked.
3. Choose the INPUT tab, select the headset as the SOUND INPUT device, adjust the INPUT SLIDER to desired level.


outlook.com இலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு


மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் outlook.com இல் உள்ள உங்கள் மின்னஞ்சல் ஒன்று அழிக்கப்பட்டு விட்டாலோ அல்லது hackers-களால் திருடப்பட்டு விட்டாலோ……நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை இலகுவாக மீட்டுக் கொள்ள(recover) முடியும்.
இதற்காக முதலில் உங்கள் பயனர் பெயர், கடவுச்சொற்களைப் பயன்படுத்தி outlook.com இனுள் உள்நுளையவும்.
தொடர்ந்து இடது பக்கத்தில் காணப்படும் Deleted எனும் கோப்புறையினை(folder) தெரிவு செய்து தோன்றும் விண்டோவில் உள்ள recover deleted messages எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
தற்போது உங்கள் இன்பாக்ஸிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்கும் செயற்பாடு ஆரம்பமாகும். இச்செயற்பாடு நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.

Saturday, August 11, 2012

UEFI: சில புதிய தகவல்கள்


யூபை எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பச் சொல், புதியதாய் இனி கணனி இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது.
இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கணனியில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS(Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.
நீங்கள் கணனியை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கணனியில் என்ன என்ன வன்பொருள் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும்.
தன் சோதனையில் அறியப்படும் அனைத்து சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும்.
எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் இயங்குதளத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும்(கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும். இதைத்தானே பயாஸ்(BIOS)இப்போது செய்து வருகிறது.
UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம்.
ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.
புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

Tuesday, August 7, 2012

Hard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி?



நீங்கள் உங்கள் கணணியை பிறருடன் பகிரும் சந்தர்ப்பங்களில் முக்கியமான கோப்புறைகள் (Folders) மற்றும் கோப்புகளை(Files) மறைத்து வைக்க விரும்புவீர்கள். இவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு டிரைவில் மறைத்து  வைப்பது எளிது. டிரைவை மறைத்து வைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் இப்பதிவில் சற்று எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.

வழிமுறைகள் :
  • windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "gpedit.msc" என டைப் செய்து group policy editor ஐ திறக்கவும்.
      
    • group policy editor ஐ திறந்ததும் User Configuration > Administrative TemplatesWindows Components  ஊடாக சென்று Windows Explorer ஐ கிளிக் செய்யவும்.
    • இப்போது வலது பக்க திரையில் "Hide these specific drives in my computer"  என்ற வரிசையை கண்டுபிடித்து அதனை இரண்டு தடவை கிளிக் செய்வதன் மூலம் அதன் Properties ஐ திறவுங்கள். 
      • Properties இல் "enabled " என்பதை தெரிவு செய்த பின்னர் "Restrict All Drives" என்பதை கிளிக் செய்வதினூடாக  நீங்கள் மறைக்க வேண்டிய டிரைவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக drive D ஐ மறைப்பதாக இருந்தால் "Restrict D drive only" என்பதை தெரிவு செய்யுங்கள். இப்போது ok ஐ கிளிக் செய்த பின் group policy editor லிருந்து வெளியேறுங்கள்.
      • அவ்வளவுதான். இப்போது My Computer ஐ திறந்து டிரைவ் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

      உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய Run Commandகளை உருவாக்குவது எப்படி?



      Microsoft Windows இயங்குதளத்தில்(operating system) ஒரு application ஐ அல்லது document ஐ அதன் இடத்திற்கு சென்று அதன் icon ஐ இரட்டை கிளிக் செய்து திறப்பதற்கு பதிலாக Run Utility இல் ஒரு Command ஐ உள்ளீடு செய்வதன் மூலம் அதனை திறக்கலாம். பொதுவாகவே Windows programகளை திறப்பதற்கான பல Run Commandகள் காணபடுகின்றன.cmd(Command Prompt) மற்றும் control(Control Panel) ஆகியவற்றை உதாரணமாககுறிப்பிடலாம்.இது போன்று நீங்களும் உங்களுக்கு பிடித்த Programs,Files மற்றும் Folders ஐ அணுகுவதற்கான Run Commandகளை சொந்தமாக உருவாக்கலாம். 
       
                          உதாரணத்திற்கு Mozilla Firefox ஐ எடுத்துகொள்வோம். Mozilla Firefox ஐ தொடக்குவதற்கான ஒரு Run Command ஐ உருவாக்க வேண்டும். நீங்கள் "mf" என உள்ளீடு செய்தால் Mozilla Firefox ஆனது திறக்க வேண்டும்.
      • Desktop இல் Mozilla Firefox இற்கான Shortcut ஐ உருவாக்கி , அதற்கு "mf" என பெயர் மாற்றம் செய்யவும்.

      • இதன் பின்னர் Windows Directory யில் இந்த Shortcut ஐ copy செய்யவும்.
      • அவ்வளவுதான். இப்போது Run Utility யில் "mf" என உள்ளீடு செய்யும் போது Mozilla Firefox ஆனது திறக்கின்றதா என சோதிக்கவும்.

      Predator - கணணியின் காவலன்



      Predator
      நீங்கள் உங்களுடைய கணணியை விட்டு தூர விலகிச்செல்ல நேர்ந்தால், அத்தருணத்தில் கணணியை யாராவது தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனை Predator மென்பொருள் மூலம் தடுக்கலாம். predator ஆனது உங்கள் pen drive ஐ ஒரு திறவுகோலாக பயன்படுத்தி கணணியை பாதுகாக்கிறது. 

       Predator  பயன்படுத்தும் முறை :  
      • முதலில் USB drive ஐ கணணியில் செருகவும்
          • பின்னர் Predator மென்பொருளை நிறுவுங்கள். நிறுவியதும் கீழே படத்தில் காட்டியவாறு ஒரு மெசேஜ் விண்டோ தோன்றும். அதில் ok பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள்.      
          • இப்போது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். அதில் New Password என்ற இடத்தில் உங்களுடைய புதிய கடவுச்சொல்லை அமைக்கவும். 
          • பின்னர் Create Key On Drive என்ற இடத்தில் உங்களுடைய pendrive இற்கான எழுத்து காட்டப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும். இல்லையெனில் dropdown list இல் இருந்து சரியான எழுத்தை தெரிவு செய்யுங்கள்.
          • இறுதியாக Create Key பட்டனையும் பின்னர் ok பட்டனையும் கிளிக் செய்யுங்கள். 
          • இப்போது desktop இல் உள்ள predator icon ஐ டபுள் கிளிக் செய்ததும் predatorஇயங்கத்தொடங்கும். 
          • predator இயங்கும் போது taskbar இல் அதன் icon ஆனது பச்சை நிறத்தில் காணப்படும்.
                  • இப்போது வழமை போல் கணணியில் உங்கள் வேலையை தொடர்ந்துசெய்து கொண்டிருங்கள்.
                  • வேறு ஏதாவது வேலை காரணமாக நீங்கள் கணணியை விட்டு தூர விலகிசெல்ல நேரும் பட்சத்தில் USB drive  கணணியிலிருந்து நீக்கி உங்களுடன்எடுத்து சென்று விடுங்கள். USB drive  நீக்கியவுடன் Keyboard மற்றும்mouse முடக்கப்படும்மேலும் திரை மறைக்கப்பட்டு கருமையாக காட்சிஅளிக்கும்.
                  • மீண்டும் உங்கள் கணணிக்கு திரும்பியவுடன் அந்த USB drive கணணியில் செருகியதும் Keyboard மற்றும் mouse ஆனதுசெயல்படுத்தப்படுவதுடன் திரையும் பழைய நிலைக்கு மீட்கப்படும்.

                   Predator இன் அம்சங்கள் :
                  •  Predator ஆனது இலவச பதிப்பாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்டதொழில்முறை(Professionalபதிப்பாகவும் கிடைக்கிறது.   
                  • Predator ஆல் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் எச்சரிக்கை செய்திகளைஅனுப்ப முடியும்.     
                  • Predator ஆனது பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருlog file இல் பதிவு செய்கிறதுநீங்கள் கணணியை விட்டு தூர விலகிஇருக்கும் தருணத்தில் மூன்றாம் நபர் யாரவது உங்கள் கணணியைபயன்படுத்த முயற்சித்திருந்தால் இந்த log file  படிப்பதன் மூலம் அதனைஅறிந்து கொள்ளலாம்
                  • Predator ஆனது உங்கள் USB டிரைவில் பாதுகாப்பு குறியீடுகளை(security codes) அடிக்கடி மாற்றுகிறதுதாங்கள் எல்லாம் பெரிய பிஸ்தா எனநினைத்து கொண்டு உங்கள் டிரைவ்  உங்களுக்கு தெரியாமல் யாரும்நகலெடுக்க நினைத்தால்பாவம் அவர்கள்அந்த நகல் வேலை செய்யாது.ஏனெனில் இதற்கிடையில் உங்கள் டிரைவில் உள்ள குறியீடுகள்(codes)மாற்றப்பட்டிருக்கும்.
                  • USB drive  கணணியில் இருந்து நீக்கியதும் Windows task manager இன்செயற்பாட்டை Predator முடக்குகின்றதுஆகையால் Predator இன்செயற்பாட்டை Ctrl-Alt-Del  பயன்படுத்தி நிறுத்த முடியாது. 
                  • Predator ஆனது விண்டோஸ் இயங்குதளத்தின் CD Autorun வசதியைமுடக்குகிறது. ஆகையால் சிறப்புருவாக்கம் செய்யப்பட்ட Malware Cd களை பயன்படுத்தி உங்கள் கணணிக்குள் பிறர் நுழைவது தடுக்கப்படுகிறது.
                  • நீங்கள் உங்களுடைய USB டிரைவ்  இழக்க நேரிட்டால் உங்களுடையகணணியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் வசதி Predator இல் உள்ளது.நீங்கள் முதல் முறையாக Predator  இயக்கும் போது கடவுச்சொல்லைஅமைக்கவும். USB டிரைவ் இல்லாத தருணத்தில் கணணியை மீளஇயக்குவதற்கு இந்த கடவுச்சொல் உதவும்.
                  • யாராவது ஒருவர் தவறான கடவுச்சொல்லை பயன்படுத்தி கணணியினுள்நுழைய முயற்சி செய்தால் Predator எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
                  • Predator ஆல் பல கணணிகளை ஒரே USB flash drive  பயன்படுத்திபாதுகாக்க முடியும்உதாரணமாக உங்கள் வீடு மற்றும் அலுவலககணணிகளை குறிப்படலாம்.

                  Predator ஐ தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்.