Tuesday, October 30, 2012

How To Remove Shortcut Virus From Pendrives And Memory Cards

If you did not format your flash drive, then check whether the files are not in

hidden mode. Follow the following steps.

Step 1:

Click on the below link and download the file "AutorunExterminator"
http://en.kioskea.net/download/download-11613-autorun-exterminator

Extract it --> Double-click on "AutorunExterminator" --> Plug your flash drive now.

This will remove the autorun.inf files from your flash drive and also from drives.

Step 2:

Click on "Start" -->Run --> type cmd and click on OK.

Here I assume your flash drive letter as G:

Enter this command.

attrib -h -r -s /s /d g:\*.*

You can copy the above command --> Right-click in the Command Prompt and

paste it.

Note : Don't forget to replace the letter g with your flash drive letter.

Now press "Enter".

Now check for your files in Flash Drive.

Step 3:

After that, download the Malwarebytes' Anti-Malware from the below link
http://www.malwarebytes.org/

Update it --> Perform "Full Scan"

Note : Default selected option is "Quick Scan".

Good Luck.

Friday, October 26, 2012

Function Key இன் செயல்பாடுகள்


நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5 மற்றும் F11 ம் மிக அதிகமான பயன்களை தருகின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லாப் புரோக்ராம்களிலும் Help Screen ஐ திறக்கப்பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.

 Windows Key+ F1 Help Screen ஐ திறப்பதற்கு.

F2
 இது Highlight செய்யபட்ட File or Folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்லவும் பயன்படுகின்றது.

Microsoft Word இல் இதன் பயன்கள்:
 Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
 Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது.
MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது.
MS WORD இல் Upper Case இல் இருந்து Lower Case க்கு வார்த்தை முழுவதையும் மாற்றவும் பயன்படுகிறது.

F4
Find Window வை திறப்பதற்கு (check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the Find, Replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஆரம்பிப்பதற்கு.

F6
Cursor ஐ Address Bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ திறக்கும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc )
Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஆரம்பமாகும்போது Safe Mode Access செய்ய இது பயன்படும்

F9
Quark 5.0 வில் Measurement toolbar திறப்பதற்கு பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஐ திறப்பதற்கு பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும்.
கணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை திறக்கப் பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்

Sunday, September 16, 2012

கணனியில் மேற்கொள்ளப்​பட்ட உள்நுழைவுக​ளின் தகவல்களை பெறுவதற்கு


கணனி ஒன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளின் உதவியுடன் உள்நுழைவுகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உள்நுழைந்தவர்களை உள்நுழைவுக் கணக்குகளின் அடிப்படையில் கண்டறிவதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது.

இதனைச் செயற்படுத்துவதற்கு முதலில் விண்டோஸ் விசையினை அழுத்தி gpedit.msc என டைப் செய்து அதனை ஓப்பின் செய்யவும்.

தோன்றும் விண்டோவில் Local Computer Policy —> Computer Configuration —> Windows Settings —> Security Settings —> Local Policies —> Audit Policy என்ற படிமுறையினூடாகச் சென்று Audit logon events என்பதை டபுள் கிளிக் செய்யவும்.

தொடர்ந்து தோன்றும் விண்டோவில் Success, Failure ஆகிய checkbox களில் அடையாளம் இட்டு OK செய்யவும். இப்போது கணனியில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான உள்நுழைவுகள், தோல்வியில் முடிந்த உள்நுளைவுகள் தொடர்பான தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

இத்தகவல்களை பார்ப்பதற்கு விண்டோஸ் விசையினை அழுத்தி Event Viewer என டைப் செய்து கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் உள்ள Windows Logs —> Security என்பதை கிளிக் செய்தால் போதும் அனைத்து விதமான உள்நுழைவுத் தகவல்களும் தனித்தனியாக காண்பிக்கப்படும்.

இவற்றினை விரிவாகக் காண்பதற்கு குறித்த ஒரு உள்நுழைவுத் தகவலின் மீது டபுள் கிளிக் செய்தால் தனியான விண்டோவில் முழுத்தகவல்களையும் பெறமுடியும்.






Friday, September 7, 2012

அனைத்து தேடல்களையும் சேமித்து வைக்கும் கூகுள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களும் இனிமேல் கூகுள் கணக்கில் சேவ் செய்து வைக்கப்படும்.

உலாவி வழியாகவும் அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.
இதுவரை கூகுள் சாதன தேடல்கள் அனைத்தும் குக்கீகளாக ஒருவரின் பெர்சனல் கணனியில் பதிந்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த குக்கீ கோப்புகளை நீங்கள் சிகிளீனர் மற்றும் பிற அது போன்ற புரோகிராம் மூலம் நீக்கும் போது, அந்த தேடல்கள் கிடைக்காது.
ஏற்கனவே தேடப்பட்ட தேடல்கள் வேண்டும் எனில், இதற்கென கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதே கணனியில் வேறு ஒரு உலாவியில் தேடல்களை மேற்கொள்கையில் கூட, இவை கிடைக்காது. அப்படி கிடைக்கும் வகையில் செட்டிங்ஸில் மாற்றங்ளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னை இனி இருக்காது.
கூகுள் சென்ற வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நம் தேடல்கள் அனைத்தும் நம் கூகுள் கணக்கில் சேவ் செய்யப்பட்டு, நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்றன.
ஒவ்வொரு முறையும் லொகின் செய்து, நாம் கூகுள் தேடல்களை மேற்கொள்கையில் தேடல்கள் அனைத்தும் கணக்கில் சேவ் செய்யப்படுகின்றன.
இவை அடுத்த முறை வேறு ஒரு உலாவி வழியாக தேடல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அப்போதும் அவை கணக்கில் சேவ் செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கின்றன.
லொகின் செய்யப்படாமல் தேடல்களை மேற்கொண்டாலும் இவை கிடைக்கும். https://www.google.com/preferences என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இவை கிடைக்கும். இந்த தளத்தில் Safe Search filter மாற்றலாம்.
ஒரு பக்கத்தில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். பெர்சனல் தேடல்கள், தடை செய்யப்பட்ட தள முகவரிகள் குறித்தும் செட் செய்திடலாம்.
இது போல தேடல்களை கூகுள் கணக்கில் சேவ் செய்து பின்னர் மீண்டும் விரும்புகையில் கிடைக்கும்படி செய்திட வேண்டும் என்பது, கூகுள் வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வெகு நாள் விருப்பமாகும். இந்த விருப்பத்தினை கூகுள் தளம் நிறைவேற்றியுள்ளது.

Friday, August 24, 2012

USB Headphone Settings

Windows XP
1. Go to the START menu, choose CONTROL PANEL, choose SOUND AND AUDIO DEVICES.
2. Choose the AUDIO tab, select the headset as the SOUND PLAYBACK and SOUND RECORDING
device.
3. Choose the VOTE tab, select the headset as the VOICE PLAYBACK and VOICE RECORDING DEVICE.
4. Choose the VOLUME tab,adjust VOLUME SLIDER as necessary.The MUTE option should not be selected.

Windows Vista / 7
1. Go to START menu, choose CONTROL PANEL, choose CLASSIC VIEW, choose SOUNDS.
2. Choose the PLAYBACK tab, select the headset as the SOUND PLAYBACK device. Choose PROPERTIES, choose the LEVELS tab, adjust the VOLUME SLIDER to desired level, verify the SPEAKER ICON in not muted.
3. Choose the RECORDING tab, select the headset as the SOUND RECORDING device. Choose PROPERTIES, choose the LEVELS tab, adjust the VOLUME SLIDER to desired level, verify the SPEAKER ICON is not muted.

Mac OS X
1. Go to SYSTEM REFERENCES, choose SOUND.
2. Choose the OUTPUT tab, select the headset as the SOUND OUTPUT device, adjust the OUTPUT VOLUME SLIDER to desired level, verify the MUTE box is unchecked.
3. Choose the INPUT tab, select the headset as the SOUND INPUT device, adjust the INPUT SLIDER to desired level.


outlook.com இலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு


மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் outlook.com இல் உள்ள உங்கள் மின்னஞ்சல் ஒன்று அழிக்கப்பட்டு விட்டாலோ அல்லது hackers-களால் திருடப்பட்டு விட்டாலோ……நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை இலகுவாக மீட்டுக் கொள்ள(recover) முடியும்.
இதற்காக முதலில் உங்கள் பயனர் பெயர், கடவுச்சொற்களைப் பயன்படுத்தி outlook.com இனுள் உள்நுளையவும்.
தொடர்ந்து இடது பக்கத்தில் காணப்படும் Deleted எனும் கோப்புறையினை(folder) தெரிவு செய்து தோன்றும் விண்டோவில் உள்ள recover deleted messages எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
தற்போது உங்கள் இன்பாக்ஸிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்கும் செயற்பாடு ஆரம்பமாகும். இச்செயற்பாடு நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.

Saturday, August 11, 2012

UEFI: சில புதிய தகவல்கள்


யூபை எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பச் சொல், புதியதாய் இனி கணனி இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது.
இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கணனியில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS(Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.
நீங்கள் கணனியை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கணனியில் என்ன என்ன வன்பொருள் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும்.
தன் சோதனையில் அறியப்படும் அனைத்து சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும்.
எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் இயங்குதளத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும்(கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும். இதைத்தானே பயாஸ்(BIOS)இப்போது செய்து வருகிறது.
UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம்.
ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.
புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.

Tuesday, August 7, 2012

Hard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி?



நீங்கள் உங்கள் கணணியை பிறருடன் பகிரும் சந்தர்ப்பங்களில் முக்கியமான கோப்புறைகள் (Folders) மற்றும் கோப்புகளை(Files) மறைத்து வைக்க விரும்புவீர்கள். இவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு டிரைவில் மறைத்து  வைப்பது எளிது. டிரைவை மறைத்து வைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் இப்பதிவில் சற்று எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.

வழிமுறைகள் :
  • windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "gpedit.msc" என டைப் செய்து group policy editor ஐ திறக்கவும்.
      
    • group policy editor ஐ திறந்ததும் User Configuration > Administrative TemplatesWindows Components  ஊடாக சென்று Windows Explorer ஐ கிளிக் செய்யவும்.
    • இப்போது வலது பக்க திரையில் "Hide these specific drives in my computer"  என்ற வரிசையை கண்டுபிடித்து அதனை இரண்டு தடவை கிளிக் செய்வதன் மூலம் அதன் Properties ஐ திறவுங்கள். 
      • Properties இல் "enabled " என்பதை தெரிவு செய்த பின்னர் "Restrict All Drives" என்பதை கிளிக் செய்வதினூடாக  நீங்கள் மறைக்க வேண்டிய டிரைவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக drive D ஐ மறைப்பதாக இருந்தால் "Restrict D drive only" என்பதை தெரிவு செய்யுங்கள். இப்போது ok ஐ கிளிக் செய்த பின் group policy editor லிருந்து வெளியேறுங்கள்.
      • அவ்வளவுதான். இப்போது My Computer ஐ திறந்து டிரைவ் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

      உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய Run Commandகளை உருவாக்குவது எப்படி?



      Microsoft Windows இயங்குதளத்தில்(operating system) ஒரு application ஐ அல்லது document ஐ அதன் இடத்திற்கு சென்று அதன் icon ஐ இரட்டை கிளிக் செய்து திறப்பதற்கு பதிலாக Run Utility இல் ஒரு Command ஐ உள்ளீடு செய்வதன் மூலம் அதனை திறக்கலாம். பொதுவாகவே Windows programகளை திறப்பதற்கான பல Run Commandகள் காணபடுகின்றன.cmd(Command Prompt) மற்றும் control(Control Panel) ஆகியவற்றை உதாரணமாககுறிப்பிடலாம்.இது போன்று நீங்களும் உங்களுக்கு பிடித்த Programs,Files மற்றும் Folders ஐ அணுகுவதற்கான Run Commandகளை சொந்தமாக உருவாக்கலாம். 
       
                          உதாரணத்திற்கு Mozilla Firefox ஐ எடுத்துகொள்வோம். Mozilla Firefox ஐ தொடக்குவதற்கான ஒரு Run Command ஐ உருவாக்க வேண்டும். நீங்கள் "mf" என உள்ளீடு செய்தால் Mozilla Firefox ஆனது திறக்க வேண்டும்.
      • Desktop இல் Mozilla Firefox இற்கான Shortcut ஐ உருவாக்கி , அதற்கு "mf" என பெயர் மாற்றம் செய்யவும்.

      • இதன் பின்னர் Windows Directory யில் இந்த Shortcut ஐ copy செய்யவும்.
      • அவ்வளவுதான். இப்போது Run Utility யில் "mf" என உள்ளீடு செய்யும் போது Mozilla Firefox ஆனது திறக்கின்றதா என சோதிக்கவும்.

      Predator - கணணியின் காவலன்



      Predator
      நீங்கள் உங்களுடைய கணணியை விட்டு தூர விலகிச்செல்ல நேர்ந்தால், அத்தருணத்தில் கணணியை யாராவது தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனை Predator மென்பொருள் மூலம் தடுக்கலாம். predator ஆனது உங்கள் pen drive ஐ ஒரு திறவுகோலாக பயன்படுத்தி கணணியை பாதுகாக்கிறது. 

       Predator  பயன்படுத்தும் முறை :  
      • முதலில் USB drive ஐ கணணியில் செருகவும்
          • பின்னர் Predator மென்பொருளை நிறுவுங்கள். நிறுவியதும் கீழே படத்தில் காட்டியவாறு ஒரு மெசேஜ் விண்டோ தோன்றும். அதில் ok பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள்.      
          • இப்போது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். அதில் New Password என்ற இடத்தில் உங்களுடைய புதிய கடவுச்சொல்லை அமைக்கவும். 
          • பின்னர் Create Key On Drive என்ற இடத்தில் உங்களுடைய pendrive இற்கான எழுத்து காட்டப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும். இல்லையெனில் dropdown list இல் இருந்து சரியான எழுத்தை தெரிவு செய்யுங்கள்.
          • இறுதியாக Create Key பட்டனையும் பின்னர் ok பட்டனையும் கிளிக் செய்யுங்கள். 
          • இப்போது desktop இல் உள்ள predator icon ஐ டபுள் கிளிக் செய்ததும் predatorஇயங்கத்தொடங்கும். 
          • predator இயங்கும் போது taskbar இல் அதன் icon ஆனது பச்சை நிறத்தில் காணப்படும்.
                  • இப்போது வழமை போல் கணணியில் உங்கள் வேலையை தொடர்ந்துசெய்து கொண்டிருங்கள்.
                  • வேறு ஏதாவது வேலை காரணமாக நீங்கள் கணணியை விட்டு தூர விலகிசெல்ல நேரும் பட்சத்தில் USB drive  கணணியிலிருந்து நீக்கி உங்களுடன்எடுத்து சென்று விடுங்கள். USB drive  நீக்கியவுடன் Keyboard மற்றும்mouse முடக்கப்படும்மேலும் திரை மறைக்கப்பட்டு கருமையாக காட்சிஅளிக்கும்.
                  • மீண்டும் உங்கள் கணணிக்கு திரும்பியவுடன் அந்த USB drive கணணியில் செருகியதும் Keyboard மற்றும் mouse ஆனதுசெயல்படுத்தப்படுவதுடன் திரையும் பழைய நிலைக்கு மீட்கப்படும்.

                   Predator இன் அம்சங்கள் :
                  •  Predator ஆனது இலவச பதிப்பாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்டதொழில்முறை(Professionalபதிப்பாகவும் கிடைக்கிறது.   
                  • Predator ஆல் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் எச்சரிக்கை செய்திகளைஅனுப்ப முடியும்.     
                  • Predator ஆனது பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருlog file இல் பதிவு செய்கிறதுநீங்கள் கணணியை விட்டு தூர விலகிஇருக்கும் தருணத்தில் மூன்றாம் நபர் யாரவது உங்கள் கணணியைபயன்படுத்த முயற்சித்திருந்தால் இந்த log file  படிப்பதன் மூலம் அதனைஅறிந்து கொள்ளலாம்
                  • Predator ஆனது உங்கள் USB டிரைவில் பாதுகாப்பு குறியீடுகளை(security codes) அடிக்கடி மாற்றுகிறதுதாங்கள் எல்லாம் பெரிய பிஸ்தா எனநினைத்து கொண்டு உங்கள் டிரைவ்  உங்களுக்கு தெரியாமல் யாரும்நகலெடுக்க நினைத்தால்பாவம் அவர்கள்அந்த நகல் வேலை செய்யாது.ஏனெனில் இதற்கிடையில் உங்கள் டிரைவில் உள்ள குறியீடுகள்(codes)மாற்றப்பட்டிருக்கும்.
                  • USB drive  கணணியில் இருந்து நீக்கியதும் Windows task manager இன்செயற்பாட்டை Predator முடக்குகின்றதுஆகையால் Predator இன்செயற்பாட்டை Ctrl-Alt-Del  பயன்படுத்தி நிறுத்த முடியாது. 
                  • Predator ஆனது விண்டோஸ் இயங்குதளத்தின் CD Autorun வசதியைமுடக்குகிறது. ஆகையால் சிறப்புருவாக்கம் செய்யப்பட்ட Malware Cd களை பயன்படுத்தி உங்கள் கணணிக்குள் பிறர் நுழைவது தடுக்கப்படுகிறது.
                  • நீங்கள் உங்களுடைய USB டிரைவ்  இழக்க நேரிட்டால் உங்களுடையகணணியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் வசதி Predator இல் உள்ளது.நீங்கள் முதல் முறையாக Predator  இயக்கும் போது கடவுச்சொல்லைஅமைக்கவும். USB டிரைவ் இல்லாத தருணத்தில் கணணியை மீளஇயக்குவதற்கு இந்த கடவுச்சொல் உதவும்.
                  • யாராவது ஒருவர் தவறான கடவுச்சொல்லை பயன்படுத்தி கணணியினுள்நுழைய முயற்சி செய்தால் Predator எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
                  • Predator ஆல் பல கணணிகளை ஒரே USB flash drive  பயன்படுத்திபாதுகாக்க முடியும்உதாரணமாக உங்கள் வீடு மற்றும் அலுவலககணணிகளை குறிப்படலாம்.

                  Predator ஐ தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்.

                  Friday, July 27, 2012

                  மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்கு

                  தகவல்களை மின்னஞ்சல்களினூடு பரிமாற்றிக் கொள்ளும் போது மிக முக்கியமான தகவல்கள் Hackers-னால் இடைமறித்து திருடப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக குறித்த மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து பரிமாற்றிக் கொள்வது சாலச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
                  இவ்வாறு ஜிமெயில் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்கான வசதியை Safe Gmail எனப்படும் கூகுள் குரோம் நீட்சி ஒன்று தருகின்றது.
                  இதனைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், கணனியை ஒருமுறை மீள்தொடக்கம் செய்யவும்.
                  அதன் பின்னர் ஜிமெயிலில் செய்தியை டைப் செய்யும் பக்கத்தில் மேலதிக பட்டன் ஒன்று தென்படும்.
                  வழமையான முறையில் செய்தியை டைப் செய்து விட்டு பின்னர் குறித்த பட்டனைப் பயன்படுத்தி செய்தியை Encrypt செய்து Send என்பதை அழுத்தவும்.
                  இதன் போது மின்னஞ்சலை பெறுபவருக்கு ஒரு இணைப்பு மட்டுமே செல்லும். அவர் குறித்த இணைப்பில் கிளிக் செய்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளித்து Encrypt செய்யப்பட்ட செய்தியை Copy செய்து Text box இனுள் Paste செய்ய வேண்டும்.
                  இணையதள முகவரி

                  https://chrome.google.com/webstore/detail/lmjkmpdndmbieflefonjgnnfimmkbedf?hl=en

                  கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கு

                  கணனி ஒன்றின் செயற்படு வேகத்தினை அதிகரிப்பதற்கு வன்பொருட்களின் திறனை மாற்றியமைத்தல்,ஒழுங்கான வைரஸ் ஸ்கானிங், தேவையற்ற கோப்புக்களை நீக்குதல் போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன.
                  அதேபோல கணனியின் பிரதான நினைவகமாகத் திகழும் RAM இனை எப்போதும் சுமையற்றதாக வைத்திருப்பதனூடாகவும் கணனியின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு Refresh செய்யும் முறை ஒன்றும் காணப்படுகின்றது.
                  தவிர Notepad இன் உதவியுடனும் RAM இனை சுத்தமாகப் பேண முடியும். அதற்கு பின்வரும் முறைகளைப் கையாள்க.
                  முதலில் கணனியின் My Computer எனும் பகுதிக்கு சென்று Tools(Windows xp எனின்) அல்லது Organize(Windows 7 எனின்) என்பதை தெரிவு செய்க.
                  தொடர்ந்து Folder and Search ஒப்சனிற்கு சென்று View tab இனுள் காணப்படும் Hide extension for Known File Type என்ற தெரிவினை Uncheck செய்து OK செய்க.
                  தற்போது Notepad இனை ஓப்பன் செய்து Mystring=(80000000) என டைப் செய்து RAM. Vbe எனும் பெயருடைய கோப்பாக Save செய்யவும்.
                  பின்பு உங்கள் கணனியின் வேகம் மந்தமாகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த கோப்பினை ஓப்பின் செய்தால் போதும் RAM சுத்தம் செய்யப்பட்டு கணனியின் வேகமானது 80 வீதத்தினால் அதிகரிக்கும்.

                  இணையத்தின் வேகத்தை அதிகரிக்க

                  எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.இதற்கு முதலில்,
                  1. Windows XPஆக இருந்தால், XP –>கிளிக் programs–> Run.
                      Windows 7 ஆக இருந்தால், programs—> search box—> Type Run.
                  2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும்.
                  3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
                  –> Computer Configuration
                  –> Administrative Templates
                  –> Network
                  –> QoS Packet Scheduler
                  –> Limit Reservable Bandwidth
                  4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும்.

                  Thursday, July 5, 2012

                  "WindowsUpdate_80070570" "WindowsUpdate_80073712" Errors

                  First follow these steps for running The System File Checker tool:
                  To determine whether the issue that you are experiencing is caused by one or more system files that are used by Windows Vista, run the System File Checker tool. The System File Checker tool scans system files and replaces incorrect versions of the system files by using the correct versions.

                  To run the System File Checker tool, follow these steps:
                  1. Click Start, and then typecmd in the Start Search box.
                  2. Right-click cmd in thePrograms list, and then click Run as administrator. If you are prompted for an administrator password or confirmation, type your password or clickContinue
                  3. At the command prompt, the following line, and then press ENTER: sfc /scannow
                  4. When the scan is complete, test to see whether the issue that you are experiencing is resolved.

                  Test Windows Update, Does this resolve your message?
                  -------------
                  If not let us try Resetting Windows Update Component Manually through the following steps:

                  Click Start, and then type cmd in the Start Search box.
                  Right-click cmd in the Programs list, and then click Run as administrator. If you are prompted for an administrator password or confirmation, type your password or clickContinue
                  At the command prompt, enter the following commands (you may copy and then paste them by right clicking with your mouse and selecting paste), and then press ENTER after each:
                  net stop wuauserv
                  net stop bits
                  net stop cryptsvc
                  ren %systemroot%\System32\Catroot2 Catroot2.old
                  net start cryptsvc
                  ren %systemroot%\SoftwareDistribution SoftwareDistribution.old
                  regsvr32 wuapi.dll
                  regsvr32 wuaueng.dll
                  regsvr32 wucltux.dll
                  regsvr32 wups2.dll
                  regsvr32 wups.dll
                  regsvr32 wuwebv.dll
                  net start bits
                  net start wuauserv
                  net start Eventlog
                  exit
                  Reboot and try update again.

                  Let us know your results.

                  Tuesday, May 1, 2012

                  விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB மூலம் கணணியில் நிறுவுவதற்கு

                  விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம்.

                  இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.

                  இதன் பின் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்,

                  1. NTFS Format இல் Pendrive or USB drive ஐ முழுமையாக Format செய்யுங்கள்.

                  2. Start Menu –>Command Prompt –>Run as administrator.

                  3. இனி கீழுள்ள Commands களை டைப் செய்து ஒவ்வொரு கமான்டுக்கும் என்டர் தட்டுங்கள்

                  4. diskpart. This is to open the disk partition program.

                  5. Now to show the list of drives type list disk.

                  6. இங்கிருக்கும் டிஸ்க் லிஸ்டில் பொருத்தமான உங்கள் டிரைவ் ஐ தேர்வு செய்ய வேண்டும்

                  7. Now type SELECT DISK X (இதில் X இற்கு பதிலாக உங்கள் கணணியில் உள்ள பென் டிரைவ் இன் எழுத்தை தேர்வு செய்ய வேண்டும்)

                  8. Now type CLEAN.

                  9. கீழுள்ள கமான்ட் களை டைப் செய்து ஒவ்வொன்றுக்கும் என்டர் தட்டுங்கள்

                  10. CREATE PARTITION PRIMARY

                  11. SELECT PARTITION 1 (Assuming your pendrive/ USB drive is 1).

                  12. ACTIVE.

                  13. FORMAT FS=NTFS.

                  14. ASSIGN.

                  15. EXIT(Now the disk partition program will exit). ஏனைய கமான்ட்கள்

                  16. விண்டோஸ் 7 சிடி அல்லது டிவிடி ஐ ட்ரைவ் வில் இடுங்கள்.

                  17. DVD drive G எனவும் Pendrive I எனவும் கருதினால் (உங்கள் கணினியின் இவை மாறுபடலாம்).

                  18. Now type G:CD BOOT.

                  19. Now type this command BOOTSECT.EXE/NT60 I: to update your USB drive with bootmgr code.

                  20. இறுதியில் சிடி இல் இருக்கும் அனைத்தையும் பென் டிரைவ்வில் காப்பி செய்ய வேண்டும்.

                  21. பென் டிரைவ் ஐ கணணியில் செருகிய பின்னர் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

                  22. F2 அல்லது F12 அல்லது DEL கீகளை அழுத்தி கணணியின் Bios செட்டிங் சென்று பூட்டிங்க் ஆப்ஸனில் USB/ Pendrive ஐ முதலாவதாக தெரிவு செய்ய மறக்க வேண்டாம்.

                  23. இனி யூ.எஸ்.பி டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ நிறுவி விடலாம்.

                  இவற்றை செய்ததும் விண்டோஸ் 7 ஐ நிறுவுவதற்கு யூ.எஸ். பி டிரைவ் தயாராகிவிடும்.