Microsoft Windows இயங்குதளத்தில்(operating system) ஒரு application ஐ அல்லது document ஐ அதன் இடத்திற்கு சென்று அதன் icon ஐ இரட்டை கிளிக் செய்து திறப்பதற்கு பதிலாக Run Utility இல் ஒரு Command ஐ உள்ளீடு செய்வதன் மூலம் அதனை திறக்கலாம். பொதுவாகவே Windows programகளை திறப்பதற்கான பல Run Commandகள் காணபடுகின்றன.cmd(Command Prompt) மற்றும் control(Control Panel) ஆகியவற்றை உதாரணமாககுறிப்பிடலாம்.இது போன்று நீங்களும் உங்களுக்கு பிடித்த Programs,Files மற்றும் Folders ஐ அணுகுவதற்கான Run Commandகளை சொந்தமாக உருவாக்கலாம்.
உதாரணத்திற்கு Mozilla Firefox ஐ எடுத்துகொள்வோம். Mozilla Firefox ஐ தொடக்குவதற்கான ஒரு Run Command ஐ உருவாக்க வேண்டும். நீங்கள் "mf" என உள்ளீடு செய்தால் Mozilla Firefox ஆனது திறக்க வேண்டும்.
- Desktop இல் Mozilla Firefox இற்கான Shortcut ஐ உருவாக்கி , அதற்கு "mf" என பெயர் மாற்றம் செய்யவும்.
- இதன் பின்னர் Windows Directory யில் இந்த Shortcut ஐ copy செய்யவும்.
- அவ்வளவுதான். இப்போது Run Utility யில் "mf" என உள்ளீடு செய்யும் போது Mozilla Firefox ஆனது திறக்கின்றதா என சோதிக்கவும்.




No comments:
Post a Comment