![]() |
| Predator |
Predator ஐ பயன்படுத்தும் முறை :
- முதலில் USB drive ஐ கணணியில் செருகவும்.
- பின்னர் Predator மென்பொருளை நிறுவுங்கள். நிறுவியதும் கீழே படத்தில் காட்டியவாறு ஒரு மெசேஜ் விண்டோ தோன்றும். அதில் ok பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள்.
- இப்போது கீழே படத்தில் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். அதில் New Password என்ற இடத்தில் உங்களுடைய புதிய கடவுச்சொல்லை அமைக்கவும்.
- பின்னர் Create Key On Drive என்ற இடத்தில் உங்களுடைய pendrive இற்கான எழுத்து காட்டப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும். இல்லையெனில் dropdown list இல் இருந்து சரியான எழுத்தை தெரிவு செய்யுங்கள்.
- இறுதியாக Create Key பட்டனையும் பின்னர் ok பட்டனையும் கிளிக் செய்யுங்கள்.
- இப்போது desktop இல் உள்ள predator icon ஐ டபுள் கிளிக் செய்ததும் predatorஇயங்கத்தொடங்கும்.
- predator இயங்கும் போது taskbar இல் அதன் icon ஆனது பச்சை நிறத்தில் காணப்படும்.
- இப்போது வழமை போல் கணணியில் உங்கள் வேலையை தொடர்ந்துசெய்து கொண்டிருங்கள்.
- வேறு ஏதாவது வேலை காரணமாக நீங்கள் கணணியை விட்டு தூர விலகிசெல்ல நேரும் பட்சத்தில் USB drive ஐ கணணியிலிருந்து நீக்கி உங்களுடன்எடுத்து சென்று விடுங்கள். USB drive ஐ நீக்கியவுடன் Keyboard மற்றும்mouse முடக்கப்படும். மேலும் திரை மறைக்கப்பட்டு கருமையாக காட்சிஅளிக்கும்.
- மீண்டும் உங்கள் கணணிக்கு திரும்பியவுடன் அந்த USB drive ஐகணணியில் செருகியதும் Keyboard மற்றும் mouse ஆனதுசெயல்படுத்தப்படுவதுடன் திரையும் பழைய நிலைக்கு மீட்கப்படும்.
- Predator ஆனது இலவச பதிப்பாகவும் மற்றும் மேம்படுத்தப்பட்டதொழில்முறை(Professional) பதிப்பாகவும் கிடைக்கிறது.
- Predator ஆல் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் எச்சரிக்கை செய்திகளைஅனுப்ப முடியும்.
- Predator ஆனது பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருlog file இல் பதிவு செய்கிறது. நீங்கள் கணணியை விட்டு தூர விலகிஇருக்கும் தருணத்தில் மூன்றாம் நபர் யாரவது உங்கள் கணணியைபயன்படுத்த முயற்சித்திருந்தால் இந்த log file ஐ படிப்பதன் மூலம் அதனைஅறிந்து கொள்ளலாம்.
- Predator ஆனது உங்கள் USB டிரைவில் பாதுகாப்பு குறியீடுகளை(security codes) அடிக்கடி மாற்றுகிறது. தாங்கள் எல்லாம் பெரிய பிஸ்தா எனநினைத்து கொண்டு உங்கள் டிரைவ் ஐ உங்களுக்கு தெரியாமல் யாரும்நகலெடுக்க நினைத்தால், பாவம் அவர்கள். அந்த நகல் வேலை செய்யாது.ஏனெனில் இதற்கிடையில் உங்கள் டிரைவில் உள்ள குறியீடுகள்(codes)மாற்றப்பட்டிருக்கும்.
- USB drive ஐ கணணியில் இருந்து நீக்கியதும் Windows task manager இன்செயற்பாட்டை Predator முடக்குகின்றது. ஆகையால் Predator இன்செயற்பாட்டை Ctrl-Alt-Del ஐ பயன்படுத்தி நிறுத்த முடியாது.
- Predator ஆனது விண்டோஸ் இயங்குதளத்தின் CD Autorun வசதியைமுடக்குகிறது. ஆகையால் சிறப்புருவாக்கம் செய்யப்பட்ட Malware Cd களை பயன்படுத்தி உங்கள் கணணிக்குள் பிறர் நுழைவது தடுக்கப்படுகிறது.
- நீங்கள் உங்களுடைய USB டிரைவ் ஐ இழக்க நேரிட்டால் உங்களுடையகணணியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் வசதி Predator இல் உள்ளது.நீங்கள் முதல் முறையாக Predator ஐ இயக்கும் போது கடவுச்சொல்லைஅமைக்கவும். USB டிரைவ் இல்லாத தருணத்தில் கணணியை மீளஇயக்குவதற்கு இந்த கடவுச்சொல் உதவும்.
- யாராவது ஒருவர் தவறான கடவுச்சொல்லை பயன்படுத்தி கணணியினுள்நுழைய முயற்சி செய்தால் Predator எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
- Predator ஆல் பல கணணிகளை ஒரே USB flash drive ஐ பயன்படுத்திபாதுகாக்க முடியும். உதாரணமாக உங்கள் வீடு மற்றும் அலுவலககணணிகளை குறிப்படலாம்.







No comments:
Post a Comment