Friday, August 24, 2012

outlook.com இலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு


மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் outlook.com இல் உள்ள உங்கள் மின்னஞ்சல் ஒன்று அழிக்கப்பட்டு விட்டாலோ அல்லது hackers-களால் திருடப்பட்டு விட்டாலோ……நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை இலகுவாக மீட்டுக் கொள்ள(recover) முடியும்.
இதற்காக முதலில் உங்கள் பயனர் பெயர், கடவுச்சொற்களைப் பயன்படுத்தி outlook.com இனுள் உள்நுளையவும்.
தொடர்ந்து இடது பக்கத்தில் காணப்படும் Deleted எனும் கோப்புறையினை(folder) தெரிவு செய்து தோன்றும் விண்டோவில் உள்ள recover deleted messages எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
தற்போது உங்கள் இன்பாக்ஸிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்கும் செயற்பாடு ஆரம்பமாகும். இச்செயற்பாடு நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment